Home உலகம் தொடரும் போர்ப்பதற்றம்: ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படைகள்!

தொடரும் போர்ப்பதற்றம்: ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படைகள்!

0

ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் நுழைந்ததை அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், போரின் தீவிரம் சற்றும் குறையவில்லை.

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்

இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.

இதனை ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் போரிட்டு வரும் வீரர்களுக்கு நன்றி என்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் எனர்ஹோடர் (Enerhodar) பகுதியில் உள்ள ஜபோரிஜிஜியா(Zaporizhzhia) அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் பதிலடி

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டும் நிலையில், போரின் போக்கை மாற்ற ரஷ்யா சுயதாக்குதல் நடத்தியதாக உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில், அனல்மின் நிலையம் மீதான தாக்குதல், ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படை என போரின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version