Home உலகம் உக்ரைன் அதிரடி : சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் போர் விமானம்

உக்ரைன் அதிரடி : சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் போர் விமானம்

0

உக்ரைனில்(ukraine) இடம்பெற்றுவரும் போரின் முக்கிய திருப்பமாக ரஷ்யாவின் (russia)Su-34 ரக போர் விமானத்தை உக்ரைன் வான்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த விமானத்தின் விமானியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இருப்பினும், மொஸ்கோ சார்பு டெலிகிராம் சனல்கள் கூடுதல் விவரங்களை வழங்கியுள்ளன.விமானம் முன் வரிசையில் இருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்

இந்த அதிரடியான தாக்குதலுக்கு உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

US F-16 போர் விமானம் மட்டும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால், மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளால் வழங்கப்பட்ட விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ரஷ்ய போர் விமானம் இதுவாகும்.

நேட்டோ உறுப்பினர்களான பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 90 F-16 விமானங்களை வழங்குவதாக உக்ரைனுக்கு உறுதியளித்தன.இதன்படி கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த விமானங்கள் உக்ரைனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version