Home இலங்கை அரசியல் பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாது! அநுர அரசை சாடிய சஜித்

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாது! அநுர அரசை சாடிய சஜித்

0

நாட்டில் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில், பொய்யால் ஆட்சி
செய்யும் புதிய அரசாங்கத்தின் உண்மை நிலை மக்கள் மத்தியில் தற்போது
வெளிப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நியோமல் பெரேரா தலைமையில் பமுனுகம பிரதேசத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,“ நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும்
விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை
முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும் உன்னிப்பாக கவனித்து
வருகின்றனர். 

ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதிகள்

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதிகளையும்,
செயற்பாட்டையும் பார்க்கும் போது அவற்றிற்கு இடையே பெரிய
இடைவெளி காணப்படுகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் 15,000 ரூபாவில் இருந்து 25,000 ரூபா ஆக
10,000 ஆல் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அந்த பணம் கூட சரியாக
கிடைக்கவில்லை என்று முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதனை பார்க்கிறோம்.

மின்கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறப்பட்டும், அதையும் நிறைவேற்ற
இவர்களால் முடியவில்லை. 

இன்னும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்துவது
தொடர்பில் பேசவே முடியாது என்று அரசாங்கம் தற்போது கருத்துக்களை முன்வைத்து
வருகிறது. 

பொருட்களின் விலை

பொருட்களின் விலையை குறைப்போம், வாழ்க்கைச் சுமையைக் குறைப்போம் என்று தேர்தல்
மேடைகளில் பிரஸ்தாபித்தாலும், இன்று தேங்காய் தட்டுப்பாடும் அரிசி
தட்டுப்பாடும் நிலவி வருகின்றன.

வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய
மாட்டோம் என்று கூறிய இவர்கள், இன்று வெளிநாட்டிலிருந்து கூட அரிசியை
இறக்குமதி செய்து வருகின்றனர். 

அரிசி தட்டுப்பாடுக்கும், தேங்காய் தட்டுப்பாடுக்கும் தேசிய ரீதியில் தீர்வு இல்லை. இவற்றை நாம்
புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும்.” என எதிர்க்கட்சித் தலைவர்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version