Home உலகம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயமான கோரிக்கையினையே முன்வைக்கின்றனர், இதனை கவனத்தில் கொண்டு அதிபர் விசேட நடவடிக்கை வேண்டும் என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (10) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிராம உத்தியோகத்தர்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் 25,000 ரூபாய் வெகுமதி (Bonus) கொடுப்பதற்கு இணங்கி உள்ளனர்.

எனினும், கிராம உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு தற்போது ரூபா 600 மாத்திரமே வழங்கப்படுவதுடன் ஒரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்காக தற்போது ரூபா 3000 மாத்திரமே வழங்கப்படுகிறது.

இதனை ரூபா 4000 அல்லது ரூபா 6000 வரை அதிகரிக்குமாறும் வருடத்திற்கு சீருடைக்காக ரூபா 5000 உம், அலுவலக உபகரணங்களுக்காக ரூபா 1500 உம் வழங்கப்படுகிறது.

எனவே இவற்றுக்கான பணத்தொகையை அதிகரித்து தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மொத்தமாக 1,10000 பேர் உள்ளனர். அதில் 90,000 பேர் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர்.

மிகுதியாக உள்ள 20,000 பேருக்கு சான்றிதழும், விசேட கொடுப்பனவும் அதிபரினால் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இம் முயற்சியை விடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவர்கள் சம்பளத்தில் மேலதிகமாக ரூபா2000 மாத்திரமே கேட்கின்றனர். இவர்கள் அநீதியான முறையில் கேட்கவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடினமான நிலையில் உள்ளது.

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

அத்துடன், ஆசிரியர்களின் சம்பளம் அதிகரித்ததால் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் வழங்கப்படாத நிலையில் உள்ளது.

இதன் பொருட்டே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நியாயமான கோரிக்கையினையே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு அதிபர் விசேட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version