Home இலங்கை பொருளாதாரம் உப்பின் விலை உயர்வு : எச்சரிக்கும் வியாபாரிகள்

உப்பின் விலை உயர்வு : எச்சரிக்கும் வியாபாரிகள்

0

பண்டிகைக் காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலையும் சடுதியாக உயர வாய்ப்புள்ளதாக உப்பு வியாபாரிகள் எச்சரிக்கை விடத்துள்ளனர்.

சீர்ற்ற காலநிலை மற்றும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

உப்பு உற்பத்தி

தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக உப்பு உற்பத்தி முடங்கிப் போயுள்ளதாகவும், இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரச சுரங்கங்களில் மட்டுமே இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version