Home உலகம் ரஷ்யாவுக்கு பேரிடி! சிரேஷ்ட லெப்டினன்ட் ஜெனரல் படுகொலை

ரஷ்யாவுக்கு பேரிடி! சிரேஷ்ட லெப்டினன்ட் ஜெனரல் படுகொலை

0

ரஷ்ய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்தாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டிருப்பதாக அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பொது ஊழியர்களின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் செயற்பட்டு வந்துள்ளார்.

உக்ரைனிய உளவுத்துறை

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கு திறக்கப்பட்டு ரஷ்யாவின் புலனாய்வுக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளாக தெரியவருகிறது.

Image Credit: Reuters

இந்த நிலையில், உக்ரைனிய உளவுத்துறை சேவைகள் சம்பந்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உக்ரைன் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

NO COMMENTS

Exit mobile version