பிரித்தானியாவில் (United Kingdom) நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரு நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவுகின்றது.
விமான போக்குவரத்து
இந்நிலையிலேயே, பல விமான நிலையங்களில் உள்ள விமானங்கள், பாதுகாப்பு கருதி இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, விமான நிலையத்திற்கு வரும் முன், பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை சரிபார்க்குமாறு அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.