Home உலகம் எலும்பும் தோலுமாக இஸ்ரேல் பிணைக்கைதி : ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

எலும்பும் தோலுமாக இஸ்ரேல் பிணைக்கைதி : ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

0

தம்மிடமுள்ள இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவர் காசாவில் தனது சொந்த புதைகுழியை தோண்டிக் கொள்ளும்  காணொளியை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பிணைக்கைதி பெயர் எவ்யதார் டேவிட் (வயது 24) இவர் ஜெர்மன் மற்றும் இஸ்ரேல் குடியுரிமை வைத்துள்ளார்.

 தனது புதைகுழியை தானே தோண்டும் பிணைக்கைதி

ஹமாஸ் வெளியிட்ட காணொளியில், சுரங்கப்பாதை ஒன்றில் டேவிட் மண்வெட்டியுடன் இருக்கிறார். தனது புதைகுழியை தானே தோண்டிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. எலும்பும் தோலுமாக, மெலிந்த உடலுடன் காணப்படும் டேவிட் காணொளியில் கூறியதாவது,

 நான் இப்போது என் புதைகுழியை தோண்டுகிறேன். ஒவ்வொரு நாளும், என் உடல் பலவீனமடைந்து வருகிறது. நான் நேரடியாக என் கல்லறைக்கு நடந்து செல்கிறேன். நான் அடக்கம் செய்யப்படப் போகும் கல்லறை இருக்கிறது. விடுதலை பெற்று நான் தூங்குவதற்கு நேரம் நெருங்கி வருகிறது. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

24 வயதான அந்த இளைஞனின் குடும்பத்தினர் இஸ்ரேல் அரசாங்கத்திடமும், உலக சமூகத்திடமும் டேவிட்டைக் காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்யுமாறு உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்தனர்.

https://www.youtube.com/embed/dnSqzptqwsQ

NO COMMENTS

Exit mobile version