Home உலகம் கனடாவில் குறைவடைந்து செல்லும் குடும்ப மருத்துவர்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவில் குறைவடைந்து செல்லும் குடும்ப மருத்துவர்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

0

கனடாவில் குடும்ப மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒன்றாரியோ மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் சுமார்  2.3 மில்லியன் பேருக்கு அடிப்படை குடும்ப நல மருத்துவ சேவை கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் ஆர்ஜென்டினா கோரிக்கை!

குடும்ப மருத்துவர்கள்

சில குடும்ப மருத்துவர்கள் ஓய்வு பெற்றுக்கொள்வதுடன் சில குடும்ப மருத்துவர்கள் வேறு துறைகள் நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

மேலும் மருத்துவ மாணவர்களில் அதிகளவானவர்கள் குடும்ப நல மருத்துவ துறையை தெரிவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச உத்தியோகஸ்தர்களுக்கான சம்பள உயர்வு கோரி மன்னாரில் வெடித்த போராட்டம்

 தீர்வுத் திட்டங்கள்

இந்தப் பிரச்சினை அதிகரிப்பதற்கு முன்னதாக தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென ஒன்றாரியோ மருத்துவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டு காலப் பகுதியில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு நற்செய்தி: பால் மா விலையில் பாரிய வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version