Home உலகம் கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான அதிர்ச்சி தகவல்

0

கனடாவின் (Canada) – ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஒன்றாரியோ குடும்ப நல மருத்துவர்கள் கல்லூரி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இந்த மாகாணத்தில் சுமார் 2.5 மில்லியன் மக்களுக்கு குடும்ப நல மருத்துவர்களின் சேவை கிடைக்க பெறுவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் எண்ணிக்கை

ஆறு மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விடவும் தற்பொழுது இந்த எண்ணிக்கை 160000த்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள குறைவு மக்களை பெரிதாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில வேளைகளில் புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்காணிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version