நடிகர் சிம்புவுக்கு தமிழ் நாட்டில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவர் மலேஷியா சென்றபோது ஒரு ரசிகர் செய்த செயலை பார்த்தால், அவருக்கு அங்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
சிம்புவை பார்த்ததும் ஒரு ரசிகர் ரோட்டிலேயே விழுந்து வணங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
விழுந்து வணங்கிய ரசிகர்
ரசிகர் அப்படி செய்வதை பார்த்த சிம்பு உடனே காரில் இருந்து இறங்கி வந்து அந்த நபரிடம் பேசி இருக்கிறார். மேலும் அவருடன் செல்பி எடுத்து கொண்டு, பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
சிம்புவை பார்த்ததும் அந்த நபர் கண்ணீரில் அழுவதும் வீடியோவில் இருக்கிறது. இதோ பாருங்க.
Nothing but pure respect for #SilambarasanTR ♥️🥺#Arasan @SilambarasanTR_ pic.twitter.com/BvjjMU6St2
— STR Trends (@STRTrends_) December 9, 2025
