Home உலகம் உலகத் தலைவர்களுடனான உறவு குறித்து நொதன்யாகு பகிரங்கம்

உலகத் தலைவர்களுடனான உறவு குறித்து நொதன்யாகு பகிரங்கம்

0

பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யூத எதிர்ப்பு அலை இருந்த போதிலும் பல நாடுகள் மற்றும் தலைவர்களிடமிருந்து முன் எப்போதும் இல்லாத ஆதரவு நமக்கு கிடைக்கின்றது.

உலகத் தலைவர்கள்

பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கின்றது.

இஸ்ரேல் இன்று எப்போதையும் விட வலிமையானது, பல உலகத் தலைவர்கள் எங்களைத் தேடி வருகின்றனர்.

நமது மகத்தான சாதனைகளைப் பார்க்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் போரில் ஈடுபட்ட போதிலும் இஸ்ரேல் ராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

சிறந்த நட்பு

நான் எனது பழைய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடிக்கடி பேசுகிறேன், விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அதிக மக்கள் தொகையை கொண்ட ஒரு பெரிய நாடு இந்தியா எங்களுடன் உறவை வலுப்படுத்த விரும்புகின்றது.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு இல்லை, அமெரிக்காவிற்கு இஸ்ரேலை விட சிறந்த நட்பு நாடு இல்லை.

உலகம் முழுவதும் யூத விரோதத்தை நாங்கள் எதிர்த்துப் போராடுகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version