Home இலங்கை அரசியல் மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! ரகசியத்தை அம்பலப்படுத்திய டிரான் அலஸ்

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! ரகசியத்தை அம்பலப்படுத்திய டிரான் அலஸ்

0

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலம் தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (26) நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். 

மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை என்பது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று கருத்து வெளியிட்டுள்ளார். 

இதன்படி, அவரது வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் முன்னாள் அதிபர் குறிப்பிடவில்லை என டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.   

மைத்திரியின் வாக்குமூலம்

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல்

கத்தோலிக்க திருச்சபை மற்றும் அரசியல் வட்டாரங்களில் குறித்த விடயம் பேசுபொருளாகியதையடுத்து, அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஐந்து மணி நேர வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார். 

இந்த வாக்குமூலம் தொடர்பான விடயங்கள் இதுவரை வெளிவராத நிலையில், இது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட டிரான் அலஸ், அவரது வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவரும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

இரண்டு ராசிக்காரர்களை தேடி வரும் செல்வசெழிப்பு! நாளைய ராசிபலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version