Home இலங்கை அரசியல் திருப்பி அனுப்பப்பட்ட எம்.பிக்களுக்கான நிதி: தமிழர் பகுதிகளில் தடைபடும் அபிவிருத்தி நடவடிக்கைகள்!

திருப்பி அனுப்பப்பட்ட எம்.பிக்களுக்கான நிதி: தமிழர் பகுதிகளில் தடைபடும் அபிவிருத்தி நடவடிக்கைகள்!

0

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு திறைசேரிக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்முறை ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஐந்து கோடிகள் ஒதுக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்!

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி

அதற்கான திட்டத்தினை குறித்த காலத்திற்கு முன்பாக முன்வைக்காமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்களது ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

இதன் காரணமாக தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருந்த 25 கோடி நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version