Home இலங்கை அரசியல் தேசிய பட்டியலுக்கு வலுக்கும் சண்டை :ரணிலுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி

தேசிய பட்டியலுக்கு வலுக்கும் சண்டை :ரணிலுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி

0

புதிய ஜனநாயக முன்னணியில் ரவி கருணாநாயக்கவிற்கு (ravi karunanayake)தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்கு முன்னதாக இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை தமக்கும் வழங்க வேண்டுமென சிறிலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால், தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் அந்த முன்னணியுடன் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா(nimal sripala de silva) தெரிவித்தார்.

 தேசியபட்டியல் நெருக்கடி கூடிய சுதந்திரக்கட்சி

புதிய ஜனநாயக முன்னணியில் எழுந்துள்ள தேசியப் பட்டியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (22) பிற்பகல் கட்சித் தலைமையகத்தில் கூடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கட்சியின் மத்திய குழுவும், பொலிட்பீரோவும் கூடி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய தேசியப்பட்டியல் எம்.பி.யை வழங்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தது எனறார்.

இதேவேளை ரவிகருணாநாயக்கவிற்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழுவை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version