Home உலகம் வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி

வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி

0

மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும்.

பனியால் உறைந்து போன நாடு

இந்தநிலையில் மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதன் காரணமாக மங்கோலியா நாடு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை பனிப்புயலுக்கு சேதமடைந்தன. இதனால் அங்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

கடுமையான வறட்சி

இந்தநிலையில் கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு பொருள் தட்டுப்பாட்டால் மங்கோலியாவில் 70 இலட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version