Home இலங்கை அரசியல் சஜித்துடன் இணைந்த மற்றுமொரு மொட்டுக்கட்சி உறுப்பினர்

சஜித்துடன் இணைந்த மற்றுமொரு மொட்டுக்கட்சி உறுப்பினர்

0

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு (Karuna Kodithuwakku) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(SLLP) மாத்தறை(Matara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்க தீர்மானித்துள்ளார்.

இதன்
பிரகாரம், இன்று(17) மாத்தறை அகுரெஸ்ஸ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மூன்றாவது பேரணியில் கலந்து
கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) சகோதரியின் மகளான சஞ்சல குணவர்தன (Sansala Gunawardana) ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்து கொண்டார்.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/slpp-mp-switches-to-sajith-s-side-1723922592

NO COMMENTS

Exit mobile version