Home முக்கியச் செய்திகள் சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு

சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு

0

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு பரீட்சைக்கு முன்னர் கசிந்ததாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் சித்திகளை வழங்குவதே சிறந்த மாற்றாக முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா?  தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க கல்விக்கு பொறுப்பான பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பொருத்தமான தெரிவு

அதன்படி, மீண்டும் தேர்வை நடத்துவது, 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மன நிலையில் கடுமையான பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நீதி வழங்குவது இன்றியமையாதது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களுக்கும் பரீட்சைக்கு முன்னர் கசிந்த மூன்று வினாக்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாகக் கருதி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பரிந்துரைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு இதன் போது அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version