Home உலகம் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்: தென்கொரியாவில் சம்பவம்

181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்: தென்கொரியாவில் சம்பவம்

0

தென் கொரியாவில் (South Korea) உள்ள விமான நிலையத்தில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபடுகிறது.

175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் விமானம் தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததாகவும், தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version