Home உலகம் தென் கொரிய ஜனாதிபதி பதவி விலகல்

தென் கொரிய ஜனாதிபதி பதவி விலகல்

0

தென் கொரியாவின் (South Korea) இடைக்கால ஜனாதிபதி ஹான் டக் சூ (Han Duck-soo) பதவி விலகியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்தமாதம் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் காரணமாக, அதிகாரபூர்வ பதவியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முன்பே பதவி விலக வேண்டும்.

இதன் காரணமாக ஹான் டக்-சூ தனது பதவியை பதவி விலகள் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகள்

இந்த பதவி விலகள் தொடர்பில் ஹான் டக் சூ தெரிவிக்கையில், “எனக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. 

மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. 

நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட நான் இறுதியாகத் தீர்மானித்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹான் டக்-சூ,பழைய பழமைவாத கட்சியின் உறுப்பினர்.பொருளாதார நிபுணர், பன்னாட்டு உறவுகளில் வலுவான நிலைப்பாடு கொண்டவர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version