அமெரிக்காவின் (USA) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.
ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் (gulf of) மெக்சிக்கோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
ஃபிளைட் ரேடார் 24 (Flightradar24 ) தளத்தின் பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
விமானங்களின் மீது குப்பைகள்
விமானங்களின் மீது குப்பைகள் விழுவதை தவிர்க்கவே பாதை மாற்றியமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Success is uncertain, but entertainment is guaranteed! ✨
pic.twitter.com/nn3PiP8XwG— Elon Musk (@elonmusk) January 16, 2025
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
ஸ்டார்ஷிப் ரொக்கெட் உடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு முகாமையாளர் டான் ஹூட் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.
பொழுதுபோக்கு உறுதி
இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், வீடியோ ஒன்றை இணைத்து, அதில் “வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.