Home உலகம் தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல் தலை

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல் தலை

0

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தீபாவளி என்ற வாா்த்தையுடன் பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.

இது தொடா்பாக கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது

‘கனடா உள்பட உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தீபாவளியாகும். கனடாவின் பன்முக கலாசாரக் கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் தலை வெளியீட்டுக்காக கனடா அஞ்சல் துறைக்கு இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. இந்திய தூதரக வலைதள தகவல்களின்படி, கனடாவில் இந்திய வம்சாவளியினா் 18 லட்சம் பேரும், இந்தியா்கள் 10 லட்சம் பேரும் உள்ளனா்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version