‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்கான 190 பில்லியன் ரூபாய் தேவை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆரம்ப மதிப்பீடு
நுவரெலியாவில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
தற்போதுள்ள ஏற்பாடுகளிலிருந்து சுமார் 40 பில்லியன் ரூபாவை பயன்படுத்தலாம் என்ற திட்டம் உள்ளது.150 பில்லியன் ரூபாவை நாம் தேடிபிடிக்க வேண்டும். அதை நாம் வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில், அவசரகால வீதிகள் சீரமைப்புக்கு சுமார் 100 மில்லியனும், பெய்லி பாலத்திற்கு120 மில்லியன் மற்றும் கடுமையாக சேதமடைந்த வீதிகள், மதகுகள் மற்றும் அணைகளை சீரமைப்பதற்கு சுமார் 14 பில்லியன் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
