Home முக்கியச் செய்திகள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா…!

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா…!

0

வீட்டில் துளசி செடி வளர்காமலே தானாக முளைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

துளசி செடி என்பது இந்துக்களுக்கு மிகவும் புனிதமான செடி என்பதுடன் மருத்துவ குணங்கள் பல கொண்டுள்ள மூலிகையாகும்.

இவ்வாறு பல நன்மைகளை கொண்டுள்ள துளசி செடி தானாக வீட்டில் வளர்வதன் காரணம் குறித்து பார்க்கலாம்.

துளசி செடி

இந்த துளசி செடி திடீரென முளைத்து வளர்வதனால் லட்சுமி தேவியின் ஆசிகள் அதிகமாக கிடைக்கும் என்பதுடன் வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கும் என கூறப்படுகிறது.

அத்துடன், பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும் என்பதுடன் வீட்டில் மகிழ்ச்சி தழும்பும் என்றும் நம்பப்படுகின்றது

இதேவேளை, துளசி வாடினாலோ அல்லது சரியாக வளரவில்லை என்றாலோ உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதற்கான அறிகுறி என கூறப்படுகின்றது.

துளசி இலை மற்றும் மலர்கள் லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு வழிபாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் முற்றத்தில் துளசி செடி வளர்த்து அன்றாடம் விளக்கேற்றி வழிபட வேண்டுவதால் பாவங்களும் நோய்களும் விலகிவிடும் என நம்பப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version