Home இலங்கை சமூகம் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

0

நீண்ட கால நிலையான வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது என்று தொழில் அமைச்சு (Ministry of labour) விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுபோன்ற போலி விளம்பரங்களால் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

போலி விளம்பரங்கள்

அண்மைய காலமாக நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பாக போலி விளம்பரங்கள் அதிகம் பரவி வருகின்றன.

இந்நிலையில், இந்த அறிவுறுத்தலை தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.  

https://www.youtube.com/embed/64ATk8hbFQE

NO COMMENTS

Exit mobile version