Home முக்கியச் செய்திகள் அநுர அரசின் முதலாவது வரவு செலவு திட்டம் – வெளியானது திகதி

அநுர அரசின் முதலாவது வரவு செலவு திட்டம் – வெளியானது திகதி

0

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரவை அங்கீகாரம்

இதேவேளை, சந்தையில் நிலவும் நாட்டரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் ஸ்வர்ண நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://ibctamil.com/article/sri-lanka-budget-next-year-january-2025-1732600073?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version