Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் வெளிநாட்டு விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான தடையை நீக்கும் என்ற செய்திகளை இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ( Ali Sabry) மறுத்துள்ளார்.
சீனாவின் கண்காணிப்பு கப்பல்கள் மீது இந்தியாவும் அமெரிக்காவும் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டது.
எனினும் ஆண்டு இறுதியில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடல் சட்ட உடன்படிக்கை
ஜப்பானிய ஊடகங்களின் செய்திகளை தெளிவுபடுத்தியே அமைச்சர் அலி சப்ரி இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
நிலைமையை மறுபரிசீலனை செய்யும் நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை தடை தொடரும் என்றும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் உடன்படிக்கையின் கீழ் கடமைகளை மதிக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என்றும் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.