ஜப்பானின் டோக்கியோவின் மினாடோ-குவில் வைத்து கூரிய ஆயுதத்துடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 22.12.2025 அன்று இடம்பெற்றுள்ளது.
மினாடோ-குவில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னர் , கழுத்தில் கத்தியுடன் நின்ற நிலையில் அந்நாட்டு காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ காவல்துறை
எனினும் மருத்துவ அறிக்கைகளின் படி அந்த நபர் சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது கை மற்றும் கழுத்தில் இரத்தப்போக்கு காயங்கள் இருந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது டோக்கியோ காவல்துறை உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கத்தியைக் கீழே போடும்படி அவரை சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திலேயே கைது
“சம்பவ இடத்தில் இருந்த ஒரு அதிகாரி தனது கழுத்தில் கத்தியை வைத்திருந்த நபரை பார்த்து கூடுதல் உதவிகோரி காவல் நிலையத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜப்பானின் துப்பாக்கிகள் மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய பின்னர், அந்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்” என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
