Home உலகம் சீனாவின் ஜனாதிபதி இலங்கைக்கு அளித்துள்ள வாக்குறுதி

சீனாவின் ஜனாதிபதி இலங்கைக்கு அளித்துள்ள வாக்குறுதி

0

இலங்கைக்கு (Sri Lanka) பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பை சீனா (China) வழங்கும் என சீனாவின் ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (15) சீன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறும் பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025 இல் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

நவீன விவசாயம்

இதன்போது, அந்நாட்டு பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்த அவர், நேற்று (14) சீன ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி, துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இலங்கையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சட்ட நடைமுறை

அத்தோடு, சட்ட நடைமுறை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எல்லை தாண்டிய சூதாட்டம், மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களை கடுமையாக ஒடுக்கவும் அவர் பிரதமரின் வலியுருத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருவருக்கும் நடந்த சந்திப்பில், இலங்கை துறைமுகங்களுக்கு வரும் சீன ஆராய்ச்சி கப்பல்கள் குறித்து எந்தவொரு விவாதமும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version