Home உலகம் கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் பலி

0

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் கடந்த புதன்கிழமை கனடா (Canada) – டொராண்டோவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 34 வயதான சிந்துஜா ஜீவராஜ் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 47 வயதான ஜீவராஜ் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

Markham Road மற்றும் Finch Avenue East ஆகிய சந்திப்புக்கு அருகிலுள்ள இரவு 7:45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.  

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்றனர்.

எனினும் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஆண் மீட்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலானதா என டொராண்டோ
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version