Home உலகம் சட்ட விரோதமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

சட்ட விரோதமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

0

சட்டபூர்வ வதிவிட அனுமதியின்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) வசிக்கும் இலங்கையர்களின் உறவினர்களுக்கு தங்களின் வதிவிட நிலையைத் திருத்திக் கொள்ள அல்லது இலங்கைக்குத் (Sri Lanka) திரும்புவதற்கான வாய்ப்பினை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

குறித்த விடயத்தினை, துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு விசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலத்தினை செப்டெம்பர் 1,2024 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

நுழைவுத் தடை

இது தனிநபர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்வதற்கு அல்லது அபராதம் மற்றும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை அந்நாட்டு அரசாங்கம் வழங்குகிறது.

பொது மன்னிப்புக் காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில், துபாயில் (Dubai) உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் எதிர்வரும் திங்கள் – வெள்ளி வரை மதியம் 2.00 முதல் 4.00 மணி வரையும் அபுதாபியில் (Abu Dhabi) உள்ள இலங்கை தூதரகத்தில், காலை 10.00 முதல் மாலை 5.00 வரையும் சிறப்புத் தூதரக சேவைகளை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், consular.dubai@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் +971 4 611 55 00 /+971 4 611 55 5 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என  ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version