Home இலங்கை அரசியல் மக்கள் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைக்கப்படும்: ரணில் உறுதி

மக்கள் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைக்கப்படும்: ரணில் உறுதி

0

நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்துள்ளதாகவும் மற்றும் வீழ்ச்சியடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஐ.டி.சி ரத்னதீப விருந்தக கட்டடத்தை நேற்று(25) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்களில் பகிரப்படும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

முன்பிருந்த நிலைமை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.

அதிபரின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவே மக்கள் அதில் பங்கெடுத்தனர்.

அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

சரிவடைந்த பொருளாதாரம்

இருப்பினும் அந்த பொருளாதார சரிவிலிருந்து இரண்டு வருடங்களில் நாட்டை மீட்டெடுக்க முடிந்துள்ளதுடன் தற்போது கொழும்பு சுற்றுலா நகரமாக மாறியுள்ளது.

மேலும் சரிவடைந்த பொருளாதாரத்தை சுற்றுலா வியாபாரத்தினால் துரிதமாக மீட்பதற்கான வசதிகளை வழங்க தங்களது தரப்பினர் தயாராகவுள்ளனர்.” என அதிபர் ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version