Home உலகம் இன்று இரவு வானில் தென்படவுள்ள அரிய காட்சி – இலங்கை மக்களுக்கு கிட்டிய வாய்ப்பு

இன்று இரவு வானில் தென்படவுள்ள அரிய காட்சி – இலங்கை மக்களுக்கு கிட்டிய வாய்ப்பு

0

2025 ஆம் ஆண்டின் விண்கல் மழை தொடர்பில் விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தெற்கு டெல்டா அக்வாரி (Southern Delta Aquariids) விண்கல் மழை பொழிவை இன்று இரவு காணலாம் என கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய வானியல் நிகழ்வு

இது தொடர்பில் பேராசிரியர கிஹான் வீரசேகர,

பூமியிலிருந்து இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான விண்கல் மழை, கும்ப ராசிக்குள் கிழக்கு வானத்தில் சிறப்பாகக் காணப்படும்.

இரவு 9 மணி முதல் அதிகாலை வரை விண்கற்களைக் காண முடியும் என்றாலும், அவற்றைப் பார்ப்பதற்கு ஏற்ற நேரம் நள்ளிரவு ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version