நாடாளுமன்றத்தில் நாட்டார் பாடல் ஒன்றை பாடி தோட்ட தொழிலார்களின் பிரச்சினையை நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீபன் விபரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
“மலையகத்தில் 52 சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் நாள் சம்பளம் 1,350 ருபாய் மட்டுமே.
இன்றும் அவர்களுக்கு உரிய சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. மேலும், வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் முகங்கொடுப்பதோடு பலர் நோய்வாய்பட்டவர்களாக உள்ளனர்” என்றுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,