Home உலகம் விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா : நாசா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா : நாசா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

சர்வதேச விண்வெளி மையத்தில் (International Space Station) உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் பூமிக்கு திரும்புவது தொடர்பில் நாசா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸும் மற்றும் சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

தொழில்நுட்ப கோளாறு

சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்கு திரும்புவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. 

ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இருவரும் எலோன் மஸ்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் (Crew Dragon) விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version