Home உலகம் நிலநடுக்கத்தின் மத்தியிலும் சத்திர சிகிச்சை செய்து சாதித்த ரஷ்ய மருத்துவர்கள்

நிலநடுக்கத்தின் மத்தியிலும் சத்திர சிகிச்சை செய்து சாதித்த ரஷ்ய மருத்துவர்கள்

0

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, ஒரு ரஷ்ய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதைக் காட்டும் காணொளியொன்றை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கிழக்கு கம்சட்காவிலிருந்து 74 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பசுபிக் பெருங்கடலில் இன்று (30) உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அத்தோடு, இது வரலாற்றில் ஆறாவது பெரிய நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

நோயாளியின் நிலைமை

நிலநடுக்கத்தின் போது, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நிலைமையை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது இந்த காணொளி மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கட்டிடம் அதிர்ந்தபோதும் மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர்.

இதேவேளை, சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், பயனாளி நலமுடன் உள்ளதாகவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version