Home உலகம் பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

0

கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் (
Pakistan) ராணுவ தளத்தை தாலிபான் (Taliban) கைப்பற்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான்கள் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ தளம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி காலை பாகிஸ்தானின் ராணுவ தளத்தை குறிவைத்து தாலிபான் படையினர் களமிறக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் தாலிபான் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இராணுவத் தளம்

கைப்பற்றப்பட்ட இந்த இராணுவத் தளம் சிறிது காலத்திற்கு முன்பு அகற்றப்பட்டதாகவும், இங்கு ராணுவ வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் சமாளித்து வருகிறது.

ஆனால் அங்கே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான்களிடம் சரண் அடைந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக்கி  வருகிறது.

தாலிபான்களின் இந்த வெற்றி காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல்வேறு ராணுவ தளங்களை பாகிஸ்தான் அகற்றி  வருவதாக கூறப்படுகிறது.

வான்வெளி தாக்குதல்

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) 2007 இல் உருவாக்கப்பட்டது, பல்வேறு கடுமையான சன்னி இஸ்லாமிய குழுக்களின் அமைப்பாக இது உருவாக்கப்பட்டு வந்தது.

பாகிஸ்தானில் தனித்தனியாக செயல்பட்டு வந்த பழங்குடி போராளி குழுக்கள் எல்லாம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியது.

பாகிஸ்தான் உள்ளேயே தாலிபான் ஆதரவு – எதிர்ப்பு குழுக்கள் உள்ளன.

கடந்த மார்ச் மாதம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும். இப்போது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version