பிரான்சில்(France) புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பட்டதாரிகளாக மாறிய இளைய தலைமுறைக்கு மதிப்பளிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று(08.12.2024) பரிசின் புறநகர் பகுதியான புளோமினலில் நடைபெற்றுள்ளது.
குறித்த மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் ஒரு பிரிவாக உள்ள தமிழ்ப்பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பளிப்பு நிகழ்வு
இதன்போது, பட்டதாரிகளாக மாறிய ஒரு பகுதியினருக்கே மதிப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டவர்களில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காய்வாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.