காக்கை வன்னியன் முதல் கருணாவரை என ஈழத்தமிழரின் கறைபடிந்த நீண்ட நெடுந் துரோக வரலாற்றுப் பங்கங்களில் இரா.சம்பந்தனுக்கும் பெரும் பக்கங்கள் இருப்பதை தமிழினம் என்றும் மறந்துவிடாது என சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட தமிழினம் திரட்சியுறாதது சம்பந்தனின் துரோகங்களுக்குக் கிடைத்த வெகுமதி என்றும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயமானது சமகால நிலவரகங்களை மையமாக வைத்து தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிடும் வாராந்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசிய இனத்தின் வீர வரலாறு எவ்வளவு நீண்ட நெடிய பக்கங்களைக் கொண்டாதாக எழுச்சிமிக்கதாக இருக்கிறதோ அதே போல தமிழினத் துரோகிகளுக்கும் தமிழின வரலாற்றில் கறைபடிந்த சில பக்கங்கள் இருக்கிறது.
கொழும்பிலுள்ள வைத்தியசாலை
ஈழத் தமிழின துரோக வரலாற்றை காக்கை வன்னியன் முதல் கருணா அம்மான் வரை என நவீன படைப்பிலக்கியவாதிகள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.
அவ்வகையில் அந்த கறைபடிந்த துரோக வரலாற்றில் இரா சம்பந்தனுக்கும் அதிக பக்கங்கள் இருப்பதை ஈழத் தமிழினம் என்றும் மறந்துவிடாது கடந்த வாரம் (31.06.2024) அன்று கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் மரணமடைந்தார்.
சம்பந்தன் மரணடையும்போது அவருக்கு வயது 91 வயது அத்தோடு பல மாதங்களாக சம்பந்தன் நோய்வாய்ப் புற்றிருந்த போது சம்பந்தன் நாடாளுமன்ற அமர்வுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதும் அவர் தனது பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்க தயாரற்றவராக இருந்தார்.
தான் இறக்கும் போதும் சிறிலங்கா ஜனநாயகக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவே இறக்க வேண்டும் என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார் அதனால்தான் தனது பதவியை துறப்பதற்கும் அரச பங்களாவிலிருந்து வெளியேறுவதற்கும் அவர் தயாரற்றவராக இருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம்
2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட போது விடுதலைப் புலிகளின் ஆளுமையால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழீழத் தேசியத்தலைவர் சம்பந்தனைத் தலைவராக்கினார்.
அப்போது புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலருக்கு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அறிவிப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.
பலரது தெரிவும் ஐயா ஜோசப் பராராசசிங்கமாகவே இருந்தது ஆனால் தேசியத் தவைர் வே.பிரபாகரன் சிரித்துக்கொண்டு சொன்ன தகவல் சம்பந்தன் துரோகி என்பது உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் சம்பந்தனை வெளியில் விடுவதை விட இந்தக் கூட்டமைப்பிற்குள் சம்பந்தனை இழுத்துவைத்திருப்பது தான் பொருத்தமாக இருக்கும் என கூறினார் என்பது தகவல்.
தலைவர் கூறியது போலவே 2009 ஆம் ஆண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கும் வரை புலிகளுக்குப் பின்னால் இழுபட்டுத் திரிந்த சம்பந்தன் யுத்தம் முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என சிங்கள நாடாளுமன்றில் முழங்கி தனது சிங்கள விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.
தமிழரசுக் கட்சி
சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலங்களில் சந்தித்த அதிபர்களில் சந்திரிக்காவிற்கு அடுத்த படியாக ரணில் விக்ரமசிங்கவிற்கே அதிக ராஜ விசுவாசத்தைக் காட்டினார் ரணில் மற்றும் மைத்திரி அரசு கொண்டு வந்த ஆட்சியில் சம்பந்தன் ஒரு பங்காளியாகவே இணைந்திருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தினரை அனைத்துலக அரங்கிலே பாதுகாத்ததில் சம்பந்தனின் பங்களிப்புக்கு நன்றிக்கடனாகவே
இரா.சம்பந்தனின் உடலை படையினர் தங்களின் விமானத்தில் கொண்டு சென்றதோடு ஒருபடி மேலே போய் அவரின் உடலை தோளில் சுமந்து தமது நன்றிக் கடனையும் தீர்த்துள்ளதாகவே மக்கள் நோக்குகின்றனர்.
அதேவேளை சம்பந்தனின் உடலைத்தை இறுதியாகப் பார்வையிட்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஈழத் தமிழினம் தயாராக இருக்கவில்லை சம்பந்தனின் உடலம் யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்படும் போது வீதியின் இருமருங்கும் சம்பந்தனின் உடலத்திற்கு தூவுவதற்காய் பூக்களோடு கால்கடுக்க மணிக்கணக்காய் கண்ணீர் மல்க காத்திருக்கவில்லை.
தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனது உடலத்தை வைப்பதற்காய் கொண்டுவந்தபோது மண்டபம் நிரம்பி மக்கள் அலைமோதவில்லை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப்பட்ட சம்பந்தனின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த இரட்டை இலக்கத்துக்கு மேல் மக்கள் திரளவில்லை என்பதும் தந்தை செல்வா கலையரங்கிலிருந்து சம்பந்தனின் உடலத்தை திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கு தயாரான போது ஒற்றை இலக்கத்தில் தான் அங்கு சிலர் கூடியிருந்தனர் என்பது தான் யாழில் சம்பந்தனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை.
நாடாளுமன்ற தேர்தல்
ஆனால் 1986 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தளபதி விக்ரர் வீரச்சாவடைந்த போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதே யாழில் திரண்டார்கள் யுத்த நெருக்கடிக்குள்ளும் வன்னியில் தளபதி பால்ராஜ் வீரச்சாவடைந்த போது ஒரு இலட்சம் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். விடுதலைப் புலி வீரர்கள் வீரச்சாவடைந்த பின் இந்த மண்டபத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டால் பல மணி நேரக்கணக்காக பூக்களோடு காத்திருப்பார்கள் மக்கள்.
இறுதியாய் அவரது திருமுகத்தைக் கண்டுவிட வேண்டும் என்று கால் கடுக்க காத்திருப்பார்கள் ஏன் கடந்த வருடம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனையளிக்கப்பட்டு தடுப்பு முகாமில் மரணமடைந்த சாந்தனின் பூதவுடன் அவரது சொந்த ஊரான வல்வட்டித்துறைக்கு கொண்டுவரப்பட்ட போது வவுனியாவில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் பூதவுடல் சுமந்துவந்த வாகனத்தை மக்கள் மறிந்து பூக்கள் தூவி அஞ்சலித்தார்கள்.
சாந்தனின் இறுதி நிகழ்வில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தார்கள் அனால் சம்பந்தனை ஈழத்தமிழினம் கண்டுகொள்ளவேயில்லை அரச பேருந்துகள் மாவட்டம் தோறும் அனுப்பட்டு ஆட்கள் சேர்த்து தான் திருணோமலையில் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி ஊர்வலத்திற்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை.
ஒருவரது இறுதி நிகழ்வில் பங்கேற்கும் மக்கள் கூட்டத்தில் அளவை வைத்துத் தான் அவரது மதிப்பு அளவிடப்படுகின்றது யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 30 அயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது ஆனால் பெருந்தலைவர் என கொண்டாடும் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்த நூறு பேருக்குமேல் திரளவில்லை என்பது தான் சம்பந்தன் செய்த துரோகங்களுக்குக் கிடைத்த வெகுமதி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.