Home உலகம் லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

0

1983 இல் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை (Black July) இனப்படுகொலைக்கு எதிராக, லண்டனில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தப் போராட்டம் ஜூலை 23, 2025 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன் பகுதியிலுள்ள பார்லிமென்ட் சதுக்கத்தில் நடைபெற்றது.

இப்போராட்டத்தை, சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் தமிழ் தேசியவாத புலம்பெயர் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்திருந்தன.

உரிமைக்குரிய குரல்

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் அனைத்து ஈழத் தமிழர்களையும், தங்களது உரிமைக்குரிய குரலை ஒலி செய்யுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனடிப்படையில், ஏராளமான ஈழத் தமிழர்கள் ஒன்று கூட, இனப்படுகொலைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி, தமிழர்களின் நீதி மற்றும் உரிமைக்காக அணைவரும் குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version