Home உலகம் திடீரென நெதன்யாகுவை தொடர்பு கொண்ட புடின்.! பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

திடீரென நெதன்யாகுவை தொடர்பு கொண்ட புடின்.! பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நேற்று தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய பதற்றநிலையும் காசா பகுதியில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் செயல்பாடும் முக்கியமாக பேசப்பட்டதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது நடைபெறும் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், காசா நிலைமையையும் அப்பகுதி மனிதாபிமான சூழலையும் பற்றிய தனது நிலைப்பாட்டை புடின் நெதன்யாகுவிடம் வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டம்

இரு தலைவர்களும் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியாவிலுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

Image Credit: samaa tv

மத்திய கிழக்கு முழுவதும் நிலவும் அதிருப்திகளுக்கிடையில், நிலைமை மேலும் மோசமடையாமல் தடுப்பது முக்கியம் என புடின் வலியுறுத்தியதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version