செர்பியாவில்(Serbia) உள்ள இஸ்ரேல்(Israel) தூதரகம் முன் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் அதிகாரியின் கழுத்தில் இரும்பு போல்ட் (Bolt) ஆல் பயங்கரமாக தாக்கியுள்ளார்.
இதனால் கழுத்தில் காயம் அடைந்த அதிகாரி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான மர்ம நபரை துபாக்கியால் சுட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயம் அடைந்த அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விசாரணை
குறித்த தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்துவதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் செர்பியா உள்துறை மந்திரி இவிகா டேசிக் கூறியுள்ளார்.
காசா (Gaza)மீது இஸ்ரேல் (Israel) கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவு செர்பியாவில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.