Home உலகம் போர் தொடங்குகிறது..! களத்திற்கு வரும் கமேனி

போர் தொடங்குகிறது..! களத்திற்கு வரும் கமேனி

0

இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “போர் தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

“அலி கைபருக்குத் திரும்புகிறார்” (Battle of Khaybar) என்று அந்தப் பதிவு கூறுவதாக ஈரான் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு தெரிவித்துள்ளது.

முதல் சமூக ஊடக பதிவு

இந்த அறிக்கை ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம் மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் யூத நகரமான கைபரை அவர் கைப்பற்றியதைக் குறிப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் குறித்த பதிவில், வானத்தில் நெருப்புத் துளிகளுடன், கோட்டை ஒன்றுக்கு வாளுடன் மனிதன் ஒருவன் நுழைவதைப் பற்றிய படம் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலைக் கோரியதிலிருந்தும், அமெரிக்கா கமேனியைக் கொல்லாமல் இருப்பதைக் கூறியதிலிருந்தும் அவரின் முதல் சமூக ஊடக பதிவு இதுவாகும்.

 

NO COMMENTS

Exit mobile version