Home உலகம் தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

0

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி ஹலேவி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தாக்குதல்கள்

ஹிஸ்புல்லா எனும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய குழு, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருவதுடன், இஸ்ரேலும் பதிலுக்கு லெபனானில் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லாவானது, ஹமாஸ் போன்ற சிறிய குழுவில்லை, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் இது மிகப்பெரிய குழுவாகும்.

போர் நீடிப்பு 

தற்போது இஸ்ரேல் இந்த குழுவை குறி வைத்து போரை நீடித்து வருவதுடன், கடந்த மூன்று மாதங்களாக லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3,300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார். 


NO COMMENTS

Exit mobile version