அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஃபைவ் ஐஸ்’ எனப்படும் சர்வதேச புலனாய்வு அமைப்பு சீனாவுக்கு செல்லும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா (America) மற்றும் அதன் புலனாய்வு சேவைகளின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் (China) மக்கள் விடுதலை இராணுவமானது, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னாள் போர் விமானிகளை பணியமர்த்துவதாகவும், அவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவை மையமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
உயர் சம்பளம்
அதன்போது, சீன விடுதலை விமானப்படை மற்றும் கடற்படையின் பயிற்சி விமானிகளுக்கு பயிற்சி அளிக்க அந்த அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், மேற்கத்திய போர் வியூகங்களை சாதிப்பதற்காக மேற்கத்திய நாடுகளின் முன்னாள் போர் விமானிகள் உயர் சம்பளத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக அமெரிக்க புலனாய்வு சேவைகள் தெரிவித்துள்ளது.