2025 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை (Sri lanka) 84 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
குறித்த தரவரிசை பட்டியலில் கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் சர்வதேச நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
விசா இல்லாமல் அணுகல்
இந்நிலையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து வருகிறது.
இந்த கடவுச்சீட்டு 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் பெற்றுள்ளது. சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளன.
அதேவேளை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்துள்ளன. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இந்த நாடுகள் சரிவைச் சந்தித்தன.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 67-வது இடத்திலும், இலங்கை 84 வது இடத்திலும், பாகிஸ்தான் 91வது இடத்திலும் உள்ளன.
