Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

0

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது,

4 ஆண்டுகளும் சிறப்பாக செயல்படுவேன்.

இது நான் செய்ய விரும்பும் ஒன்றல்ல. நான் ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளும் சிறப்பாக செயல்படுவேன். இது குறித்து முடிவு எடுக்க சிறந்த குடியரசுக் கட்சிக்காரரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.

 அற்புதமான துணைத் தலைவர்

பலர் நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்கு இவ்வளவு வலுவான கோரிக்கைகள் ஒருபோதும் வந்ததில்லை. உங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரு துணைத் தலைவர் இருக்கிறார். ஜே.டி.வான்ஸ் அற்புதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான, புத்திசாலித்தனமான பையன். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதிபதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version