Home இலங்கை சமூகம் திருக்கோணேஸ்வரர் ஆலய தாலி விவகாரம்: ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

திருக்கோணேஸ்வரர் ஆலய தாலி விவகாரம்: ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

0

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள அம்மனுடைய தாலி களவாடப்பட்ட விடயம் தொடர்பில் போலியான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், ஆலய பொதுச்சபையின் ஆயுட்கால உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு திருகோணமலை – உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்தினால் ஆளுநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தாலி திருட்டு

திருக்கோணேச்சரம் கோயில் தாலி திருட்டு போன குறித்து விசாரணை மேற்கொள்ள ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஆளுநர், “ஒரு மாகாணத்தில் முதலமைச்சர் இல்லாத போது முதலமைச்சரின் அனைத்து அதிகாரமும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாச்சார அமைச்சர் என்ற வகையில் இதற்கான தீர்வினை காணவேண்டிய முழுப்பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது” என்றார்.

ரஜீவ்காந்த் கேள்வி கேட்பது என்பது திருடர்களை தப்ப வைப்பதற்கான கேள்வி போல் உள்ளது என பொது மக்கள் சிலர் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய பெண்ணொருவர், ஆளுநர் பிரதேச செயலாளர், கிராம சேவகர் எவ்வாறு பொதுச்சபை உறுப்பினர்களை சந்திக்கலாம்?

பதிலளித்த ஆளுநர்

அதற்கு பதிலளித்த ஆளுநர், “ஆளுநர் என்ற வகையில் இந்த மாகாணத்தில் யாரை வேண்டுமென்றாலும் அழைத்து பேசுவதற்கு அதிகாரம் உள்ளது. ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்கள்,பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள், கோயில் பொது சபையினர் என அனைவரையும் அழைத்து கலந்துரையாடுவதற்கான முழு அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளது.

உங்களுடைய பொது சபையினரை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்” என்றார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய குறித்த பெண், “ஆளுநரிடம் சோழர் காலத்து தாலி திருடு போயவுள்ளது என தங்களுக்கு முறைப்பாடு வந்துள்ளது என தெரிவித்துள்ளீர்கள்  அப்போது நீங்கள் சோழர் காலாத்தில் பிறந்தவரா?

அதற்கு பதில் அளித்த ஆளுநர், “முறைப்பாடு செய்தவர் சோழர் காலத்தில் பிறந்தாரா அல்லது 2008 ஆம் ஆண்டு பிறந்தரா என எனக்கு தெரியாது” என்றார்.

ஆளுநர் குறித்த கூட்டத்தில் அரசியல் பேச கூடாது என தெரிவித்திருந்த போதும், திருக்கோணேஸ்வர ஆலயத்தலைவரின் மனைவி “திருட்டு போன நகையை தேட போனால் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம்” என பகிரங்கமாக தெரிவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ஆளுநர், “இங்கு அரசியல் பேசக்கூடாது. இது அரசியல் கூட்டம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போனமை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைக்குழு அமைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version