Home இலங்கை சமூகம் இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (3.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பலத்த காற்று

தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version