Home உலகம் உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் டாப் 10 நாடுகள்: எவை தெரியுமா !

உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் டாப் 10 நாடுகள்: எவை தெரியுமா !

0

 உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு நாட்டின் விலைமதிப்பில்லாத சொத்து அந்த நாட்டில் வசிக்கும் புத்திசாலி மக்கள்தான்.

அனைத்து நாடுகளிலுமே புத்திசாலி மக்கள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு நாட்டின் புத்திசாலித்தனத்தை அளவிடுவது எளிதான காரியமல்ல.

சராசரி நுண்ணறிவு 

இருப்பினும், சராசரி நுண்ணறிவு அளவு (IQ) மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு World of Card Games, தரவு நாடுகளை அவற்றின் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியுள்ளது.

அவர்கள் நாடுகளின் IQ மதிப்பெண்களை கணக்கிடுவர் மட்டுமல்லாமல், உலக நாடுகள் அவர்களின் கல்வி, சமூக அமைப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் எவ்வளவு முதலீடு செய்கின்றன என்பதோடு, அவர்களின் ஒட்டுமொத்த மன செயல்திறனிலும் நாடுகளை நிலைநிறுத்தியுள்ளனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில் புத்திசாலித்தனமான மக்கள்தொகை கொண்ட முதல் பத்து நாடுகள் வரிசையில் சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், ஜெர்மனி, போலந்து, டென்மார்க் மற்றும் பின்லாந்து என்பவை அடங்கும்.

NO COMMENTS

Exit mobile version